/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்பு மனு பெற காத்திருந்த அதிகாரிகள்; பொள்ளாச்சியில் தாக்கல் இல்லை: கோவையில் சுயேட்சை ஒருவர் மனு

ADDED : மார் 20, 2024 10:07 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், சுயேட்சையாக போட்டியிட முதல் நாளான நேற்று ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக, பொள்ளாச்சி லோக்சபா தொகுதி உள்ளது.
இந்த தொகுதிக்கு, டி.ஆர்.ஓ., ஷர்மிளா தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக, வேட்பு மனுக்கள் சரிபார்ப்பது, டிபாசிட் தொகை செலுத்துவது, வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என சரிபார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், வேட்பாளர் பட்டியலில் பெயர் விபரம் சரிபார்க்க, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி பட்டியல் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதேபோல, அலுவலக நுழைவுவாயிலில் இருந்து, 100 மீ., துாரத்துக்கு, கோவை, பழநி, பாலக்காடு ரோடுகளில் எல்லை கோடுகள் வரையப்பட்டிருந்தன. காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று, சப்-கலெக்டர் அலுவலகத்தில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. அதேநேரம், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக, நுார்முகமது என்பவர், தேர்தல் நடத்தும் அலுவலர் டி.ஆர்.ஓ., ஷர்மிளாமிடம் கோவையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.