sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புதிய தொழில்நுட்பம் செயல் விளக்க நிகழ்ச்சி

புதிய தொழில்நுட்பம் செயல் விளக்க நிகழ்ச்சி

புதிய தொழில்நுட்பம் செயல் விளக்க நிகழ்ச்சி


ADDED : பிப் 14, 2024 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 01:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இயந்திரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பல்கலையில், உணவு பதன் செய்தல், ஆற்றல், பண்ணை இயந்திரத்துறை, உயிர் சக்தி உபகரணங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட உபகரணங்களை காட்சிப்படுத்தி, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், பருப்பு உடைக்கும் இயந்திரம், காய்கறி நடவு செய்யும் இயந்திரம், ஆற்றல் சேமிப்பு இயந்திரம் என பல இயந்திரங்களின் செயல் விளக்கங்களை, முதுநிலை மாணவர்கள் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். துவக்கவிழாவில், துணைவேந்தர் கீதாலட்சுமி, வேளாண் துறையில் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். இதில், உணவு பதன்செய் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us