தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கருவியில் நெட்வொர்க் பிரச்னை; பஸ் டிக்கெட் வழங்குவதில் சிக்கல்

கருவியில் நெட்வொர்க் பிரச்னை; பஸ் டிக்கெட் வழங்குவதில் சிக்கல்

கருவியில் நெட்வொர்க் பிரச்னை; பஸ் டிக்கெட் வழங்குவதில் சிக்கல்


ADDED : ஜூலை 10, 2025 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; நெட்வொர்க் பிரச்னையால் கட்டணம் வசூலிக்கும் இயந்திரம் செயல்படாததால் பஸ் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், 836 டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களை, நவீன தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் மயமாக்கி, மக்களுக்கு பஸ் சேவைகளை எளிமைப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 'டிஜிட்டல்' சேவைகளை கோவை பயணிகளுக்கு வழங்க, அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்தது. கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு வசதி மற்றும் ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.கோவை மாநகர மற்றும் மொபசல் பஸ்களில் இக்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கண்டக்டர் ஒருவர் கூறுகையில்,''கட்டணம் செலுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ள இயந்திரம் செயல்படுவதற்கு, 4 ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதன் காரணமாக நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டு, கட்டணம் செலுத்தும் போது தாமதம் ஏற்படுகிறது. அதற்குள் அடுத்த பஸ் நிறுத்தம் வந்து விடுகிறது. இதனால் டிக்கெட் கொடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு சிலர் டிக்கெட் எடுக்காமல் சென்றும் விடுகின்றனர். அவர்களை நிறுத்தி டிக்கெட் எடுக்க வைக்கும் போது குறித்த நேரத்தில் பஸ் இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, 5 ஜி வழங்க வேண்டும்,' என்றார்.

கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,''இதுகுறித்து கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டக்டர் சிலருக்கு கருவியை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us