/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த தேசிய கருத்தரங்கம்
/
அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த தேசிய கருத்தரங்கம்
அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த தேசிய கருத்தரங்கம்
அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த தேசிய கருத்தரங்கம்
ADDED : டிச 24, 2025 05:11 AM

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் நிறுவனத்தில் முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில், 'உலகளாவிய நிலைத்த பொறுப்புடைமை, பசுமையான எதிர்காலத்திற்கான பல்நோக்கு பொருண்மையில் வழிவகைகளை மேற்கொள்ளுதல்' என்ற தலைப்பில், தேசியக்கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பாரதி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, மலேசியாவின் இன்டி சர்வதேச பல்கலையின் மூத்த விரிவுரையாளர் சுமாபராஹகரன், 'நிலையான வளர்ச்சிக்கான நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அவினாசிலிங்கம் பல்கலையின், முன்னாள் அறிவியல்புல முதன்மையர் நிர்மலாவின் சேவையைப் பாராட்டி, துணைவேந்தர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சிறப்பு அமர்வுகளும் குழுவிவாத நிகழ்வுகளும் நடைபெற்றன.
ஐ.சி.எப்.ஆர்.இ. வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவன விஞ்ஞானி ரேகா வாரியர், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் உதவி நிர்வாக அறங்காவலர் கவுரி, முன்னாள் மாணவியர் சங்கத்தலைவர் அன்னபூரணி , பொதுச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

