/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூட்ஸ் நிறுவன இயக்குனருக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் விருது
/
ரூட்ஸ் நிறுவன இயக்குனருக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் விருது
ரூட்ஸ் நிறுவன இயக்குனருக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் விருது
ரூட்ஸ் நிறுவன இயக்குனருக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் விருது
ADDED : ஆக 05, 2025 11:21 AM

கோவை: தேசிய பாதுகாப்பு கவுன்சில் தமிழ்நாடு பிரிவின் சார்பில், 'தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2023' என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமை வகித்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் லலித் கபனே, தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவ ராவ், தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தலைவர் ஆனந்த் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில், தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தொழிற்சாலைகளை நடத்தி வரும், 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில், அமைச்சர் கணேசன் விருது வழங்கினார்.
இவ்விழாவில், கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசனுக்கு, 'மிகச்சிறந்த நீண்ட கால பங்களிப்பிற்கான விருது' வழங்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.