/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடுமலை ரோட்டில் 'மேக்கப்' வேலை; மக்கள் புகாரை கண்டுகொள்ளாததால் வேதனை
/
உடுமலை ரோட்டில் 'மேக்கப்' வேலை; மக்கள் புகாரை கண்டுகொள்ளாததால் வேதனை
உடுமலை ரோட்டில் 'மேக்கப்' வேலை; மக்கள் புகாரை கண்டுகொள்ளாததால் வேதனை
உடுமலை ரோட்டில் 'மேக்கப்' வேலை; மக்கள் புகாரை கண்டுகொள்ளாததால் வேதனை
ADDED : ஜூலை 22, 2025 10:07 PM

பொள்ளாச்சி; முதல்வர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் வரும் போது ரோட்டை சீரமைக்க அக்கறை காட்டும் அதிகாரிகள், மக்களின் கஷ்டம் புரிந்து நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும், என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை போக்குவரத்து வசதிக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், 24 கோடியே, 77 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ரோடு முறையான பராமரிப்பு இல்லாமல் விபத்துகள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.
இந்த ரோட்டில், இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடுகள் மோசமாக உள்ளன. ரோட்டின் இருபுறமும், சென்டர் மீடியனிலும் புதர் வளர்ந்து இருந்தது. இந்த ரோடு மிக மோசமாகி, குண்டும், குழியுமாக விபத்துக்களை ஏற்படுத்தும் பகுதியாக இருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ரோடுகளுக்கு 'பேட்ச் ஒர்க்' செய்யும் பணிகள் நடைபெற்றன. ரோட்டோரம் இருந்த புதர் சுத்தம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. இந்நிலையில், முதல்வர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக துாய்மைப்படுத்தும் பணியில் அக்கறை காட்டும் அதிகாரிகள், பல முறை மக்கள் புகார் செய்திருந்த நிலையில் நடவடிக்கை எடுத்திருந்தால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருக்காது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரோடாக மாறிய உடுமலை ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. எங்கு குழி உள்ளதோ அங்கு மட்டுமே பேட்ச் ஒர்க் போடப்பட்டது. ஒரு மழைக்கு கூட தாங்காத அளவுக்கே 'பேட்ச் ஒர்க்' பணிகளும் நடைபெற்றன.
வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளான போதும், ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.மையத்தடுப்புகளில் உள்ள கம்பிகள் சேதமடைந்து, புதர் மண்டி காணப்பட்டது. அதுவும் சீரமைக்கப்படாமல் இருந்தது.தற்போது, முதல்வர் வருக்கைக்காக உடுமலை ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' செய்து, பளீச்சென மாற்றப்பட்டு வருகிறது. மையத்தடுப்புகளில் இருந்த புதர் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பார்த்த உடுமலை ரோடா இது; கனவா இது என நினைக்கும் அளவுக்கு மாறியுள்ளது. முதல்வர், அமைச்சர் என முக்கிய பிரமுகர்கள் வரும் போது மட்டும் ரோட்டை சீரமைக்கின்றனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்து, இனிமேலாவது புகார் தெரிவித்ததும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காணாமல், வி.வி.ஐ.பி.,க்கள் வரும் போது, 'மேக்கப்' வேலை செய்வது வேதனையளிக்கிறது.
இவ்வாறு, கூறினர்.

