sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தடையின்மை சான்று கேட்டு கடிதம்

/

 தடையின்மை சான்று கேட்டு கடிதம்

 தடையின்மை சான்று கேட்டு கடிதம்

 தடையின்மை சான்று கேட்டு கடிதம்


ADDED : ஜன 24, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. துாரத்துக்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நீலாம்பூர் வரை 5 கி.மீ. நீட்டிக்க கோரப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் மதிப்பீடு தயாரித்தனர். விமான நிலைய ஆணையத்திடம் தடையின்மை சான்று பெற விண்ணப்பித்தனர்.

இதே வழித்தடத்தில், மெட்ரோ ரயிலும் இயக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகவே இப்பணியை மெட்ரோ நிர்வாகம் மேற்கொள்வதா, நெடுஞ்சாலைத்துறை செய்வதா என இறுதி முடிவெடுக்க வேண்டியிருந்தது.

இச்சூழலில், மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. திருத்திய திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்ப உள்ளது. இதற்கிடையே, 5 கி.மீ. துாரத்துக்கு மேம்பாலம் கட்டிக் கொள்ள தடையின்மை சான்று கேட்டு, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கண்காணிப்பு பொறியாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'தடையின்மை சான்று கிடைத்த பின்பே, எத்தனை இடங்களில் துளையிட்டு துாண்கள் எழுப்ப வேண்டும் என தீர்மானிக்கப்படும். கட்டுமான பொருட்களின் விலைக்கேற்ப மதிப்பீடு மாறுபடும்' என்றனர்.






      Dinamalar
      Follow us