/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானாவாரியில் மகத்தான வருவாய் தரும் கொடுக்காப்புளி; 'உழவே தலை 7.0' கருத்தரங்கில் பயனுள்ள தகவல்
/
மானாவாரியில் மகத்தான வருவாய் தரும் கொடுக்காப்புளி; 'உழவே தலை 7.0' கருத்தரங்கில் பயனுள்ள தகவல்
மானாவாரியில் மகத்தான வருவாய் தரும் கொடுக்காப்புளி; 'உழவே தலை 7.0' கருத்தரங்கில் பயனுள்ள தகவல்
மானாவாரியில் மகத்தான வருவாய் தரும் கொடுக்காப்புளி; 'உழவே தலை 7.0' கருத்தரங்கில் பயனுள்ள தகவல்
ADDED : ஜூலை 13, 2025 11:40 PM

கோவை; 'அக்ரி இன்டெக்ஸ் 2025' வேளாண் வர்த்தக கண்காட்சியையொட்டி, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில், 'உழவே தலை 7.0' கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சியில், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், “கோவை 90 சதவீதம் விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்தது. அதில் கிடைத்த வருவாய், இடுபொருட்களைக் கொண்டுதான், ஜவுளித் துறை வளர்ந்தது. அந்த வளர்ச்சியில் இருந்து விரிவடைந்துதான் கோவை இவ்வளவு பெரிய தொழில் நகராக உருவெடுத்துள்ளது,” என்றார்.
'வறட்சியிலும் வளம் தரும் கொடுக்காப்புளி' என்ற தலைப்பில், வேளாண் பல்கலை முன்னாள் டீன் (தோட்டக்கலை) பாலமோகன் பேசியதாவது:
மானாவாரியில் பயிர் செய்ய, மிகச் சிறந்த மரப்பயிர் கொடுக்காப்புளி. நுங்குக்கு அடுத்தபடியாக, பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கை உணவு கொடுக்காப்புளி. ஏக்கருக்கு 82 முதல் 160 மரங்கள் வரை நடலாம். 1.5 டன் முதல் 2.5 டன் வரை மகசூல் கிடைக்கும்.
ஓராண்டு நிறைந்ததும் பலன் கொடுக்கும். தோட்டத்தில் கிலோ ரூ.250க்கு எடுத்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு 500 மி.மீ.,க்கு குறைவான மழைப்பொழிவு உள்ள பகுதியிலும், எதுவும் விளையாத உப்பு நிலத்திலும் வளரும்.
மிகச் சுவையான அதேசமயம் ஊட்டச்சத்து மிக்க பழம். புரோட்டின், கால்சியம், பொட்டாசியம் நிறைந்தது. முதியவர்களுக்கு கால்சியம் சத்தை எளிதில் தரும். ஊறுகாய், உலர்பொடி, மிட்டாய், ஜூஸ் என மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ்லுந்த், எக்ஸ்னோரா அறக்கட்டளை தலைவர் செந்தூர் பாரி, வர்த்தக சபை செயலாளர் பிரதீப், துணைத் தலைவர்கள் நடராஜன், துரைராஜ், உழவே தலை ஒரகுறைந்த நீர் போதும்
செடி நட்ட முதல் மூன்று மாதங்களுக்கு, நீர் பாய்ச்சினால் போதும். மிகக் குறைந்த நீரில் தாக்குப்பிடித்து வளரும். பெரிய பராமரிப்பு தேவையில்லை. கம்பு, மக்காச்சோளம் போன்ற ஊடுபயிர்களையும் வளர்க்கலாம்.
விவசாயி, வெறும் விவசாயியாக இருந்தால் மட்டும் வளம் கிடைக்காது; வியாபாரியாக மாற வேண்டும். அப்போதுதான் லாபகரமான விவசாயத்தை மேற்கொள்ள முடியும். ஜன., பிப்., மாதங்களில் பூக்கும். மார்ச், ஏப்ரலில் அறுவடை செய்யலாம். ஒருங்கிணைப்பாளர் மணி சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

