/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்
/
ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்
ADDED : டிச 22, 2025 05:23 AM

கிணத்துக்கடவு: கோவை தெற்கு மாவட்ட ஜெ. பேரவை சார்பில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என, தேவாணம்பாளையம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார். கோவை மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்கள், தி.மு.க. பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்ட இன்னல்களை துண்டுபிரசுரங்களாக வழங்கி பிரசாரம் செய்தனர்.
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஜெ. பேரவை துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர்கள் வெங்கடேஷ், விநாயகமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சிங் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ. கூறுகையில், ''தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 97 லட்சத்துக்கும் மேற்பட்ட இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரியில் இல்லாதோர்களை நீக்கம் செய்துள்ளனர்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில், இவர்களை நீக்கம் செய்யாததால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. இம்முறை தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்,'' என்றார்.

