/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட விதிகளை மீறாமல் 'கனவு இல்லம்' பொறியாளர் ஆலோசனைப்படி அமைந்தால் நலம்
/
கட்டட விதிகளை மீறாமல் 'கனவு இல்லம்' பொறியாளர் ஆலோசனைப்படி அமைந்தால் நலம்
கட்டட விதிகளை மீறாமல் 'கனவு இல்லம்' பொறியாளர் ஆலோசனைப்படி அமைந்தால் நலம்
கட்டட விதிகளை மீறாமல் 'கனவு இல்லம்' பொறியாளர் ஆலோசனைப்படி அமைந்தால் நலம்
ADDED : நவ 22, 2024 11:16 PM

கனவு இல்லம் என்பது குறிப்பாக நடுத்தர மக்களுக்கு கனவாகவே உள்ளது. வங்கி கடன், அடமானம் உள்ளிட்ட வழிகளில் வீடு கட்டுபவர்கள் சரியான முறைகளை பின்பற்றி கட்டினால் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்காது.
முதலில் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் நமது மனையின் எல்லைகளை அறுதியிட்டுக்கொள்ள வேண்டும். பிறரது இடத்தையோ, பொது இடத்தையோ சிறிதும் ஆக்கிரமிப்பு செய்வது பிற்காலத்தில் பாதிப்புகளை தரும்.
வீடு கட்டுவதற்கு திட்டமிடும்போது தேர்ந்த பொறியாளர் ஒருவரை அணுகுவது நல்லது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து தேவையான கட்டட அனுமதியை பெறுவதோடு, கட்டட விதிகளை எவ்வகையிலும் மீறாமல் திட்டமிடுதல் வேண்டும்.
கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்க(கொசினா) செயல்பாட்டுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
நமது வீடு கட்டுவதற்கான 'பட்ஜெட்' வரையறுக்கப்பட்ட பின், அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மனையின் மண் வளத்தை பரிசோதித்து அதற்கு ஏற்ப அஸ்திவார முறையை தேர்வு செய்ய வேண்டும்.
களி மண் பூமியை தோண்டியபின் அதே மண்ணை கொண்டு குழியை நிரப்பவோ, 'பேஸ்மென்ட்' நிரப்பவோ, சமன்படுத்தவோ பயன்படுத்த கூடாது. வேறு நல்ல கிராவல் மண்ணை பயன்படுத்த வேண்டும். அனைத்து கட்டுமான பொருட்களின் தரமும், கட்டும் முறையும் இந்திய தர நிர்ணய குறியீட்டின்படி பொறியாளரின் ஆலோசனைப்படி அமைப்பது நல்லது.
அஸ்திவாரம் கட்டியவுடன், உள்ளும், புறமும் சிமென்ட் கலவையால் பூசியபின் மண் நிரப்பும் உயரம் வரை 'பிட்டுமன்' பெயின்ட் அல்லது ஏதேனும் 'வாட்டர் புரூப்பிங் கெமிக்கல்' கொண்டு பூசிக்கொள்ள வேண்டும். இது நிலத்தில் இறங்கும் நீர், 'பேஸ்மென்ட்' சுவர் வழியாக மேல் சுவருக்கு உயர்ந்து ஓதம் ஏற்படாமல் இருக்க உதவும்.
அஸ்திவார மண் நிரப்பியவுடன் ஒரு அடி இடைவெளியில் மண்ணில் கடப்பாரை கன அளவில் குழி எடுத்து, அதில் கரையானை அழிக்கும் மருந்தை ஊற்ற வேண்டும்.
இது கட்டடத்தில் கரையான் அரிக்காமல் இருக்க உதவும். மேல்சுவர் எழுப்பும் முன் 'டேம்ப் புரூப் கோர்ஸ்' இட வேண்டும்.
இது நிலத்தில் இருந்து நீர் மேலே சுவற்றில் ஏறாமல் பாதுகாக்கும். மேலும், ஜன்னலுக்கு கீழே 'சில் கான்கிரீட்' மற்றும் ஜன்னல், கதவுகளுக்கு மேலே 'லிண்டல் கான்கிரீட்' போன்றவற்றை பொறியாளரின் ஆலோசனைப்படி கண்டிப்பாக கட்ட வேண்டும்.
'காலம் பீம் ஜாயின்ட்' மற்றும் 'எலக்ட்ரிக்கல் சுவர் காடி' போன்றவற்றில் எதிர்காலத்தில் விரிசல்கள் வராமல் இருக்க, அவற்றை அடைக்கும் பொழுது பைபர் பிளாஸ்டிக் வலையை பயன்படுத்துதல் சிறந்தது. ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

