/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட தன்னார்வ தொண்டர் பணியிடத்துக்கு நேர்காணல்
/
சட்ட தன்னார்வ தொண்டர் பணியிடத்துக்கு நேர்காணல்
ADDED : நவ 05, 2025 11:05 PM
கோவை: சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர் பணியிடத்துக்கு, இன்று நேர்காணல் நடக்கிறது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை பொள்ளாச்சி, உடுமலை மற்றும் வால்பாறை ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள், 31 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆட்கள் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணியிடத்திற்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூக சேவகர்கள் விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டது.
83 பேர் பணிக்கு விண்ணப்பித்தனர். இவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. இவற்றில், 16 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தகுதியான 67 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், இன்று காலை 11 மணிக்கு நேர்காணல் நடக்கிறது.

