/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
/
சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
ADDED : நவ 07, 2024 08:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் ; சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் ஊர்வலம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கேலக்ஸி ரோட்டரி சங்க சமுதாய குழுவும் இணைந்து, சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை கடைபிடித்தது.
இந்நிகழ்ச்சியை ஒட்டி இம்மையத்தில், 'வருமுன் காப்போம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது. தொடர்ந்து, குப்பிச்சிபாளையம் ரோட்டில் ஊர்வலமாக சென்று, பொது மக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சரசு செய்திருந்தார். இயக்குனர் சகாதேவன் நன்றி கூறினார்.

