/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியா நியூஸி. வர்த்தக ஒப்பந்தம் சைமா வரவேற்பு; மோடிக்கு நன்றி
/
இந்தியா நியூஸி. வர்த்தக ஒப்பந்தம் சைமா வரவேற்பு; மோடிக்கு நன்றி
இந்தியா நியூஸி. வர்த்தக ஒப்பந்தம் சைமா வரவேற்பு; மோடிக்கு நன்றி
இந்தியா நியூஸி. வர்த்தக ஒப்பந்தம் சைமா வரவேற்பு; மோடிக்கு நன்றி
ADDED : டிச 24, 2025 05:00 AM
கோவை: இந்தியா நியூஸிலாந்து இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
சைமா தலைவர் துரை பழனிசாமி அறிக்கை:
ஜவுளிக்கு வரியே இல்லை என்பதன் வாயிலாக, இத்துறைக்கு பேரூக்கம் அளித்த மத்திய அரசுக்கு நன்றி. கடந்த நிதியாண்டில், இந்திய ஜவுளி ஏற்றுமதி 3,690 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதில் நியூஸிலாந்துக்கு 10.3 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது.
நியூஸி.,யின் ஜவுளி இறக்குமதி ஆண்டுக்கு 190 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், இந்தியாவுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய ஜவுளி மற்றும் ஆடைத்துறைக்கு சரியான நேரத்தில் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க இந்த வாய்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று.
இந்த ஒப்பந்தமானது, இந்திய உற்பத்தியாளர்களை மதிப்புக்கூட்டப்பட்ட பிரிவில் மேலும் வலுவாக்கும். இந்த ஒப்பந்தம் ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய, பிரதமர் மோடி, அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

