/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு; விற்பனை விலையும் உயர்வு
/
சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு; விற்பனை விலையும் உயர்வு
சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு; விற்பனை விலையும் உயர்வு
சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு; விற்பனை விலையும் உயர்வு
ADDED : டிச 19, 2025 06:48 AM

பொள்ளாச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே, வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை மற்றும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. இங்கு, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம், திண்டுக்கல், பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் செம்மறியாடு, வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அதன்படி, பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், நேற்று ஏல முறையில் விற்கப்பட்டது. ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு பின், சில வாரமாக ஆடு வரத்து குறைந்து, விற்பனையும் மந்தமானது. கார்த்திகை மாதம் துவங்கியதால், ஆடு விற்பனை படுமந்தமானது.
நேற்று ஆடுகள் வரத்து இருந்ததுடன் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி விற்பனைக்காக ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.
கடந்த மாதம், 300 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. தற்போது, 600க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
வரத்து அதிகரித்ததும், 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு, 7,500 ரூபாய் முதல், 8,500 ரூபாய் வரையிலும், 28 கிலோ எடை கொண்ட பெரிய கிடா ஆடு வகை, 23 ஆயிரம் ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த மாதத்தைவிட, 2 ஆயிரம் ரூபாய் முதல், மூவாயிரம் ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

