/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனமகிழ் மன்றம் பெயரில் மதுபான 'பார்'கள் அதிகரிப்பு
/
மனமகிழ் மன்றம் பெயரில் மதுபான 'பார்'கள் அதிகரிப்பு
மனமகிழ் மன்றம் பெயரில் மதுபான 'பார்'கள் அதிகரிப்பு
மனமகிழ் மன்றம் பெயரில் மதுபான 'பார்'கள் அதிகரிப்பு
ADDED : டிச 10, 2024 11:42 PM
அன்னுார்; தினமும் 12 மணி நேரம் மதுபானம் அருந்தும் 'பார்'களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்கள், அன்னுாரில் புற்றீசல் போல் அதிகரித்துள்ளன.
அன்னூர் நகரில், நான்கு டாஸ்மாக் கடைகளும், கணேசபுரம், குன்னத்தூர், மாணிக்கம்பாளையத்தில் மூன்று டாஸ்மாக் கடைகளும் செயல்படுகின்றன.
காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, மதுபானம் அருந்தும் பார்களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்கள், அன்னுார் வட்டாரத்தில் அதிகரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுக்கு முன், அன்னுாரில், கோவை ரோட்டில், முதல் மனமகிழ் மன்றம் துவக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன், அவிநாசி ரோட்டில் துவங்கியது.
இரு மாதங்களுக்கு முன், குப்பேபாளையம், நால் ரோட்டில் துவக்கப்பட்டது. 10 நாட்களுக்கு முன், அன்னுார் - சிறுமுகை சாலையில் துவக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஓதிமலை சாலையில் டாஸ்மாக் கடை அருகிலும், சிறுமுகை சாலையில் டாஸ்மாக் கடை அருகிலும், மேட்டுப்பாளையம் சாலையில் ஜீவா நகரிலும், மனமகிழ் மன்ற கட்டுமான பணி நடந்து வருகிறது.
'குடி'மகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடையில் விற்கும், அதே விலையில் மனமகிழ் மன்றங்களில் மது விற்கப்படுகிறது. காலை 11:00 மணிக்கு மது விற்பனை ஆரம்பித்து, இரவு 11:00 மணி வரை நடக்கிறது. குடிநீர், டம்ளர், ஊறுகாய், இலவசமாக வழங்கப்படுகிறது. அரசியல் பிரமுகர்கள் சிலர், பினாமிகள் பெயரில், மனமகிழ் மன்றங்களை துவக்கி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் பார்கள் அமைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது' என்றனர்.

