/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இழப்பீட்டில் பாக்கி ஒரு அரசு பஸ் ஜப்தி
/
இழப்பீட்டில் பாக்கி ஒரு அரசு பஸ் ஜப்தி
ADDED : பிப் 28, 2024 12:01 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஒரு அரசு பஸ் நீதிமன்றம் சார்பில் ஜப்தி செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்தவர் வரலட்சுமி, 62. இவரது கணவர் செல்வராஜ், 70. கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு நவ., 26ம் தேதி மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்ல அரசு பஸ்ஸில் வரலட்சுமி ஏறினார்.
அப்போது ஓட்டுநரும், நடத்துனரும் அவர் ஏறுவதற்குள், பஸ்ஸை இயக்கி விட்டனர். இதனால் கீழே விழுந்து வரலட்சுமிக்கு இடது கை, கால் ஆகியவற்றில் அடிப்பட்டு, வீட்டிலேயே அவர் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கெங்கராஜ் கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வரலட்சுமிக்கு ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 471 இழப்பீடு தர வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இழப்பீட்டில் இன்னும் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பாக்கி தராமல் போக்குவரத்து கழகம் கால தாமதம் செய்து வந்த நிலையில், நீதிமன்ற அலுவலர் ரமேஷ் கண்ணன் நேற்று மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நீதிமன்றம் உத்தரவின் படி, அரசு பஸ்ஸை ஜப்தி செய்தார்.----

