/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலை உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
நெடுஞ்சாலை உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 13, 2025 06:37 AM
கோவை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன் மிகு உதவியாளர்கள் - ரோடு இன்ஸ்பெக்டர்கள் - சங்கம் சார்பில், கோவை கோட்டப்பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை - திருச்சி சாலையில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
கோவை கோட்டத்தில் பல ஆண்டுகளாக காலியாகவுள்ள ரோடு இன்ஸ்பெக்டர் நிலை 2 பணியிடங்களை நிரப்ப, கோட்டப்பொறியாளரிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், அரசாணை விதிமுறைகளின்படி, காலிப்பணியிடங்களை நிரப்ப 2022, நவ. 23ம் தேதி அறிவுறுத்தினார். பெரும்பான்மையான கோட்டங்களில் பதவி உயர்வு வாயிலாக 25 காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி நடந்தது.
ஆனால், கோவைக் கோட்டப் பொறியாளர் அரசாணையையும் மதிக்கவில்லை, அமைச்சரின் அறிவுறுத்தலையும் பின்பற்றவில்லை; உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பொதுச்செயலாளர் குருசாமி, கோவை கோட்ட செயலாளர் சின்னச்சாமி உட்பட மாநில, மண்டல, கோட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

