/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைக்கோடி கிராம மக்கள் வரை அரசு திட்டங்கள் சென்றடையணும்! கிராம சபையில் கலெக்டர் பேச்சு
/
கடைக்கோடி கிராம மக்கள் வரை அரசு திட்டங்கள் சென்றடையணும்! கிராம சபையில் கலெக்டர் பேச்சு
கடைக்கோடி கிராம மக்கள் வரை அரசு திட்டங்கள் சென்றடையணும்! கிராம சபையில் கலெக்டர் பேச்சு
கடைக்கோடி கிராம மக்கள் வரை அரசு திட்டங்கள் சென்றடையணும்! கிராம சபையில் கலெக்டர் பேச்சு
ADDED : அக் 03, 2024 05:26 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் அபின்யா தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கோவை கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, சப் - கலெக்டர் கேதரின் சரண்யா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுவேதா சுமன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.
புகையிலை இல்லா ஊராட்சி, 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடிப்படை எழுத்தறிவு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
கோவை முன்னோடி மாவட்டமாக இருந்தாலும், கடைக்கோடி மக்கள் வரை அரசின் அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். அடிப்படை கல்வி மட்டும் மாணவர்களுக்கு போதாது. மாணவர்கள் தொடர்ந்து மேல் படிப்பு படிக்க வேண்டும். அதற்கு அரசு நிச்சயம் உதவும்.
பெண்கள் தங்கள் குடும்ப அவசர நிலைக்கு தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர். இதை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு, பேசினார்.
எம்.பி., பேசுகையில், ''கிராமப்புறங்களில் பொதுச்சுகாதாரம் அவசியம். கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கல்வி அவசியத்தை வலியுறுத்தி அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை பயன்படுத்தி பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஊராட்சி அலுவலகத்தின் அருகில் மரக்கன்று நடப்பட்டது.

