/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவர்னர் ரவி சென்னை திரும்பினார்
/
கவர்னர் ரவி சென்னை திரும்பினார்
ADDED : பிப் 19, 2024 06:49 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக மாநில கவர்னர் ரவி, 15ம் தேதி வருகை தந்தார்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கி இருந்த அவர், 16ம் தேதி முத்தநாடு மந்து தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு, தனது மனைவியுடன் சென்று, அங்குள்ள 'தேக்கிஸ்' அம்மன் கோவிலில், பிரார்த்தனை செய்தார். தோடரின மக்களுடன் நடனமாடி, மக்களுடன் கலந்துரையாடினார்.
நேற்று முன்தினம் காலை, கவர்னர் தனது மனைவியுடன் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று, இயற்கை அழகை கண்டு ரசித்தார். பிறகு, 'ஸ்டோன் ஹவுஸ்' அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்த கவர்னர் ரவி, நேற்று காலை, 10:30 மணிக்கு ராஜ்பவனில் இருந்து, கார் மூலம் கோவைக்கு திரும்பிய அவர், அங்கிருந்து சென்னை சென்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் எஸ்.பி., சுந்தரவடிவேல் ஆகியோர், வழி அனுப்பி வைத்தனர்.

