/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மூடல்: அன்னூர் மக்கள் தவிப்பு
/
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மூடல்: அன்னூர் மக்கள் தவிப்பு
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மூடல்: அன்னூர் மக்கள் தவிப்பு
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மூடல்: அன்னூர் மக்கள் தவிப்பு
ADDED : மார் 10, 2024 11:17 PM
அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மூடப்படுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
அன்னுார் வட்டாரத்தில், பொன்னே கவுண்டன் புதூர், பெரிய புத்தூர், பசூர் ஆகிய ஊர்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகளும், அன்னுார், சொக்கம்பாளையம், காட்டம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம், ஆனையூர் ஆகிய ஊர்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகளும், அன்னுாரில் அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இத்துடன் ஆறு மெட்ரிக் பள்ளிகளும் அன்னுார் வட்டாரத்தில் உள்ளன. கோவில்பாளையம் பகுதியில், கோவில் பாளையம், அத்திப்பாளையம், இடிகரை ஆகிய ஊர்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர் குப்பே பாளையத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கில் பல்வேறு பாடத் பிரிவுகளில் சேர்ந்து படித்து வந்தனர்.
பாலிடெக்னிக் முடித்தவுடன் வேலை வாய்ப்பு உடனடியாக கிடைப்பதால் ஆர்வமாக சேர்ந்து வந்தனர். பாலிடெக்னிக் முடித்தவர்கள் பொறியியல் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம் என்பதாலும் மாணவர்கள் அவற்றில் சேர்ந்து வந்தனர்.
இந்நிலையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டது. வரும் கல்வி ஆண்டில் பாலிடெக்னிக்கை முழுமையாக மூடுவதாக தெரிவித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியதாவது:
அன்னுார் வட்டாரத்தில் குப்பேபாளையத்தில் மட்டும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் செயல்பட்டு வந்தது இதைத் தவிர அரசு பாலிடெக்னிக் அல்லது தனியார் பாலிடெக்னிக் அன்னுார் வட்டாரத்தில் இல்லை.
தற்போது இந்த பாலிடெக்னிக்கும் மூடப்படுவதால் கோவை அல்லது திருப்பூருக்கு அரசு பாலிடெக்னிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பத்தாம் வகுப்புடன் தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்ளும் நிலை உள்ளது. அரசு உடனடியாக அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும். அல்லது புதிதாக அரசு பாலிடெக்னிக் அன்னுார் வட்டாரத்தில் துவக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.

