/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவுசார் மையத்தில் துவங்குகிறது இலவச பயிற்சி
/
அறிவுசார் மையத்தில் துவங்குகிறது இலவச பயிற்சி
ADDED : டிச 16, 2025 05:01 AM
கோவை: மாநகராட்சி அறிவுசார் மைய நுாலகத்தில், 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' குறித்த, திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை துவங்க உள்ளது.
ஆடிஸ் வீதியில், மாநகராட்சி சார்பில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்படுகிறது.
தினமும், 300-க்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் படித்து வருகின்றனர்.
இம்மையத்தில், கல்லுாரி படிப்பு முடித்த இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டு, பல்வேறு துறைசார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள், இலவசமாக நடத்தப்படுகின்றன.
இந்த ஓராண்டில், 10க்கு மேற்பட்ட துறைகள் சார்ந்து இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 500க்கு மேற்பட்ட இளைஞர்கள் பலனடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாளை 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' துறை சார்ந்த பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்படுகிறது. 30 நாள் பயிற்சி வகுப்பில், திட்டமிடல், ஆளுமை திறன், பட்ஜெட், லாஜிஸ்டிக்ஸ், விற்பனைத்திறன் உள்ளிட்ட பல தலைப்புகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது. துறை சார்ந்த நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என, நுாலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

