/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி
/
மாணவர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி
ADDED : டிச 10, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; கஸ்துாரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில், சீனிவாசன் நினைவு ஓவியப்பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி டிச., 25 முதல் 28ம் தேதி வரை நடைபெறும்.
கல்லுாரி மற்றும் பள்ளியில் இருந்து அதிகபட்சமாக, 10 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். கும்பகோணத்தை சேர்ந்த ஓவியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். பள்ளி, கல்லுாரிகள் 20ம் தேதிக்குள், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஓவியத்தில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், வரும் 16 முதல் 20ம் தேதி வரை நேரில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 0422-2574110, 90035 34181, 73734 90858.

