ADDED : மார் 11, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கோவை கே.ஜி., மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய முகாமில், 397 பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில், 27 பேர், இலவச கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி முதல்வர் சண்முகம், செயலாளர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

