/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம்--ஊட்டி சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடாது வனத்துறை வேண்டுகோள்

ADDED : ஏப் 26, 2025 12:31 AM
மேட்டுப்பாளையம், ;மேட்டுப்பாளையம் --ஊட்டி சாலையில், வாகனங்கள் வேகமாக செல்லக் கூடாது என வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள், உள்ளூர் மக்கள் என தினமும் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
ஊட்டி சாலையில் ஓடந்துறைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டம் அதிகமாக உலா வரும். அவ்வாறு வரும் மான்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்துகளை தவிர்க்க வனத்துறையினர் ரோந்தை அதிகரித்துள்ளனர். வாகன ஓட்டிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், ஊட்டி சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும். வனவிலங்குகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலையை கடக்கும். எனவே இச்சாலையில் ரோந்தை அதிகரித்துள்ளோம். மேலும், வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது, மெதுவாக தான் இயக்க வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம், என்றனர்.