/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கால்பந்து; நாராயணகுரு சாம்பியன்
/
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கால்பந்து; நாராயணகுரு சாம்பியன்
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கால்பந்து; நாராயணகுரு சாம்பியன்
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கால்பந்து; நாராயணகுரு சாம்பியன்
ADDED : பிப் 05, 2024 01:11 AM

கோவை;இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, மண்டல அளவிலான கால்பந்து போட்டி, நாராயணகுரு கல்லுாரி சார்பில், இரண்டு நாட்கள் நடந்தது.இப்போட்டியில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள், நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
இறுதிப்போட்டியில் நாராயணகுரு கல்லுாரி மற்றும் சி.கே.பி.சி., கல்லுாரி அணிகள் மோதின. முதல் பாதி நேர முடிவில், நாராயணகுரு கல்லுாரி அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் போட்டி கடுமையானது.
ஆட்ட நேர முடிவில், 2 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி 'டிராவில்' முடிந்தது. பின்னர் வெற்றியாளர்களை தீர்மானிக்க, டை பிரேக்கர் நடத்தப்பட்டது.
இதில் நாராயணகுரு கல்லுாரி அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீ நாராயணகுரு கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீஹரி பரிசுகளை வழங்கினார்.
நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் உதயகுமார், நாராயணகுரு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் கல்பனா, உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

