/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெத்தபெட்டமைன் கடத்திய ஐவர் கைது
/
மெத்தபெட்டமைன் கடத்திய ஐவர் கைது
ADDED : ஜன 18, 2026 05:05 AM
கோவை: கோவை மாநகர மதுவிலக்கு பிரிவினர், நல்லாம்பாளையம்- மணியகாரம்பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். மாருதி காரில் வந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி, சோதனையிட்ட போது, மெத்தபெட்டமைன் என்ற போதைபொருள் கடத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக, துடியலுார், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அஜய்,25, சாய்பாபா காலனி, ரகுபதி காலனி லே அவுட்டை சேர்ந்த மணிகண்டன்,36, குனியமுத்துார், பி.கே.புதுாரை சேர்ந்த விசாகன்,23, குனியமுத்துார், பாரதி நகரை சேர்ந்த அப்பாஸ்,27, இடையர் பாளையம், வ.உ.சி. நகரை சேர்ந்த தனுஷ்,22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 130 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், ஐந்து பேரும் சேர்ந்து, வெளிமாநிலத்தில் இருந்து, போதைப் பொருளை கடத்தி வந்து, கோவை மாநகர் பகுதியில் விற்பனை செய்ய திட்டமிட்டதும், போதை பொருட்களை விற்று 'ஜிபே' வாயிலாக பணம் பெற்றதும் தெரியவந்தது.

