/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேதவாடிக்கு நீர் வரத்து சாத்தியக்கூறுகள் ஆய்வு
/
கேதவாடிக்கு நீர் வரத்து சாத்தியக்கூறுகள் ஆய்வு
ADDED : அக் 24, 2024 09:31 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி குளம் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குளத்தில், கடந்த சில மாதங்களாக நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் பலர் பி.ஏ.பி., நீரை குளத்திற்கு கொண்டு வர வேண்டும் என, அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். இதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதை தொடர்ந்து, நேற்று கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார், கோதவாடி குளத்தை ஆய்வு செய்தார். ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, கோதவாடி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர். ஆய்வில், குளத்தின் பரப்பளவு, நீர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

