ADDED : மார் 03, 2024 08:52 PM

மேட்டுப்பாளையம்;குறிஞ்சி நகரில் நடந்த கண் இலவச சிகிச்சை முகாமில், 85 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் அடுத்த, ஜடையம்பாளையம் புதூரில் குறிஞ்சி நகரில் உள்ள பியூச்சர் ஸ்டார் குழந்தைகள் பள்ளியும், எம்.எம்.எஸ்., குளோபல் கண் மருத்துவமனையும் இணைந்து, குறிஞ்சி நகர் பள்ளி வளாகத்தில் கண் சிகிச்சை இலவச முகாமை நடத்தின.
முகாமுக்கு பள்ளியின் தாளாளர் நைசி வர்கீஸ் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் ஜம்புலிங்கம் முகாமை துவக்கி வைத்தார். குறிஞ்சி நகர் குடியிருப்போர் நல நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
எம்.எம்.எஸ்., கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த,85 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை ஆசிரியைகள் அனிதா லெனின், கிரேசி மேத்யூ ஆகியோர் செய்திருந்தனர்.

