/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூராட்சி செயல்பாடுகள் மாணவர்களுக்கு விளக்கம்
/
பேரூராட்சி செயல்பாடுகள் மாணவர்களுக்கு விளக்கம்
ADDED : நவ 22, 2024 11:06 PM

பொள்ளாச்சி: சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் செயல்பாடுகளை, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லும் மாணவர்கள், அங்குள்ள செயல்பாடுகளை கேட்டறிந்து, தேர்வுக்கு ஏற்றாற்போல் திட்ட அறிக்கையும் தயாரிக்கின்றனர்.
அதன்படி, சாந்தி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். செயல் அலுவலர் பூபதி, பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.
குறிப்பாக, மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அதை செயல் வடிவம் பெற செய்வது, பொதுநிர்வாகம், சுகாதார பணிகள் மேற்கொள்வது, மன்ற கூட்டம், துாய்மைப் பணியாளர்களின் பணிகள், பேரூராட்சி தொடர்பாக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினார்.

