/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாஜி கூட்டுறவு ஊழியருக்கு சிறை
/
மாஜி கூட்டுறவு ஊழியருக்கு சிறை
ADDED : மார் 01, 2024 01:28 AM
கோவை:கூட்டுறவு சங்க மோசடி வழக்கில், 21 ஆண்டுக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஏரிப்பட்டியில், துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வந்த எழுத்தர் நடராஜ், வங்கி கணக்கிலிருந்து, 16.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நடராஜ் மீது, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில், 2022, அக்., 18ல் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 21 ஆண்டுகளாக, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் சரவணபாபு, குற்றம் சாட்டப்பட்ட நடராஜூக்கு,68, மூன்றாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.

