/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
/
விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
ADDED : நவ 07, 2024 08:01 PM
பொள்ளாச்சி; விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு, இ.எஸ்.ஐ., சார்பில் நிரந்தர ஊன பயன் உதவித்தொகை வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு அருகே பகவதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனமகேஸ்வரி, 48. கிணத்துக்கடவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த, 2024ல், ஜன., மாதம் பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டது.
இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் இவர் பதிவு செய்திருந்ததால், விபத்துக்கான நிரந்த ஊன பயன் உதவி தொகை வழங்க, கோவை இ.எஸ்.ஐ., சார்பு மண்டலம் சார்பில் துணை இயக்குனர் (பொறுப்பு) ரவிக்குமார், உதவி இயக்குனர் பெருமாள் ஆகியோர், உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து, பொள்ளாச்சி கிளை மேலாளர் பரமேஸ்வரன், 30 ஆயிரத்து, 724 ரூபாய்க்கான காசோலையை தனமகேஸ்வரியிடம் வழங்கினார். இ.எஸ்.ஐ., அலுவல காசாளர் யோகஹரிஹரன், அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர்.

