/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட்: அரையிறுதிக்கு கே.ஐ.டி., கல்லூரி தகுதி

ADDED : மார் 20, 2024 10:15 PM
கோவை : சி.ஐ.டி., கல்லுாரி சார்பில் நடக்கும், இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில், அரசு தொழில்நுட்ப கல்லுாரியை வீழ்த்தி, கே.ஐ.டி., கல்லுாரி அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், மூன்றாம் ஆண்டு 'டாக்டர் எஸ்.ஆர்.கே. பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கிரிக்கெட் போட்டி கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் காலிறுதிப்போட்டியில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி (ஜி.சி.டி.,) மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி (கே.ஐ.டி.,) அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஜி.சி.டி., அணி, 15.5 ஓவர்களில் 83 ரன்களுக்கு சுருண்டது. ஆதித்யன் 37 ரன்கள் சேர்த்தார். கே.ஐ.டி., அணி சார்பில் கோபிநாத், பிரவீன் ஆகியோர், தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
வெற்றி பெற 84 ரன்கள் தேவை என்ற, எளிய இலக்குடன் களமிறங்கிய கே.ஐ.டி., அணியினர், 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு, 85 ரன்கள் எடுத்து போராடி வென்றனர். ஜி.சி.டி.,யின் ஆதித்யான் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.