sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சேற்றில் விழுந்த யானை வனப்பகுதியில் விடுவிப்பு

/

 சேற்றில் விழுந்த யானை வனப்பகுதியில் விடுவிப்பு

 சேற்றில் விழுந்த யானை வனப்பகுதியில் விடுவிப்பு

 சேற்றில் விழுந்த யானை வனப்பகுதியில் விடுவிப்பு


ADDED : ஜன 27, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: குப்பனூரில், கழிவு சேற்றில் சிக்கி, உடல் பலவீனமான பெண் காட்டு யானையை, ஒருநாள் சிகிச்சைக்குப்பின், வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட குப்பனூரில், நேற்றுமுன்தினம் அதிகாலை, விளைநிலத்திற்குள் புகுந்த ஒற்றை பெண் யானை, தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த கழிவு சேற்றில் சிக்கியது. வனத்துறையினர், 3 மணி நேரம் போராடி, சேற்றில் இருந்து யானையை மீட்டனர்.

யானை உடல் பலவீனமாகி, எழுந்து நிற்க முடியாமல் இருந்தது. இதனையடுத்து, நேற்றுமுன்தினம் காலை, 10:30 மணி முதல் வனக்கால்நடை மருத்துவ குழுவினர் விடிய, விடிய சிகிச்சையளித்தனர். யானையின் உடல்நலம் வேகமாக முன்னேறியது.

இதனையடுத்து, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட தீத்திபாளையம், அய்யாசாமி கோவில் வனப்பகுதியில், நேற்று காலை, 8:00 மணிக்கு, வனத்துறையினர், ஒற்றை காட்டு யானையை விடுவித்தனர். தொடர்ந்து யானையை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us