/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் தேர்தல் துளிகள்
/
கோவை மாவட்டத்தில் தேர்தல் துளிகள்
ADDED : ஏப் 20, 2024 12:52 AM
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம் அருகே உள்ள வரதையங்கார் பாளையம், ஓட்டு சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறால், அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான எல்.முருகன், கணேசபுரம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னூர், பசூர் ஆகிய இடங்களில் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
n ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி முன்பு வாக்காளர்களிடம் ஆதரவுதிரட்டுவது குறித்து, தி.மு.க., -- அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அன்னூர் போலீசார் இருதரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.
n அன்னூர் பேரூராட்சியில், கோவை சாலையில் பெரும்பாலானவர்களுக்கு, பூத் சிலிப் வழங்காததால் ஓட்டு சாவடி வளாகத்தில் வந்து, கூட்டமாக திரண்டு நீண்ட நேரம் காத்திருந்து, பூத் சிலிப் பெற்று வாக்களித்தனர்.
n வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, அல்லிக்காரம் பாளையம் துவக்கப்பள்ளி ஓட்டுச் சாவடியில் வாக்களித்தார்.

