/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு தொகுதிகளில் புதிதாக 37 ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
/
இரு தொகுதிகளில் புதிதாக 37 ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இரு தொகுதிகளில் புதிதாக 37 ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இரு தொகுதிகளில் புதிதாக 37 ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
ADDED : டிச 23, 2025 07:16 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிகளில், 37 ஓட்டுச்சாவடிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்க, தேர்தல் பிரிவு வாயிலாக ஆலோசிக்கப்பட்டது.இது குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவை பிரிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில், 269 ஓட்டுச்சாவடிகளாக இருந்த நிலையில், தற்போது, 12 ஓட்டுச்சாவடிகள் புதியதாக சேர்க்கப்பட்டு, 281 ஓட்டுச்சாவடிகளாக மாறியுள்ளது.
செங்குட்டைப்பாளையம் அரசுப்பள்ளி, ராசக்காபாளையம் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி, ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, மகாலிங்கபுரம் குப்பாண்டகவுண்டர் துவக்கப்பள்ளி, டி.கோட்டாம்பட்டி எல்.எம்.எஸ். பள்ளி, ஆர்.கே.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகள்; ஜோதிநகர் ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏ.பி.டி. நகராட்சி நடுநிலைப்பள்ளி என மொத்தம், 12 ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
வால்பாறை தொகுதியில், 237 ஓட்டுச்சாவடிகளாக இருந்தன. தற்போது, 25 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து, 262 என எண்ணிக்கை உயர்ந்துள்ளது.ரமணமுதலிபுதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தென்சங்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி, ஆழியாறு அரசு உயர்நிலைப்பள்ளி, ஆழியாறு நகர் துவக்கப்பள்ளி, பொங்காளியூர் நடுநிலைப்பள்ளி, கோட்டூர் மனோன்மணி செல்லமுத்தையா அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பழனியூர் துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்கலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பில்சின்னாம்பாளையம், தேவிபட்டிணம், தம்மம்பதி, வேட்டைக்காரன்புதுார், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், அரசு திவான்சாபுதுார், வேட்டைக்காரன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆலாங்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைக்கொம்பு நாகூர், குப்புச்சிபுதுார் நடுநிலைப்பள்ளிகள், ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி,ஸ்டான்மோர் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வால் பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐயர்பாடி ரோப்வே, குரங்குமுடி, பன்னிமேடு 1வது டிவிசன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என, மொத்தம், 25 ஓட்டுச்சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில்,ஏற்கனவே ஓட்டுச்சாவடிகள் பிரிக்க கருத்துரு அனுப்பப்பட்டது. அதன்படி, ஓட்டுச்சாவடிகளும் பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன,' என்றனர்.

