/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஞானத்தை வளர்ப்பதாக கல்வி இருக்க வேண்டும்'
/
'ஞானத்தை வளர்ப்பதாக கல்வி இருக்க வேண்டும்'
ADDED : பிப் 27, 2024 11:06 PM

பெ.நா.பாளையம்:துடியலுார் நாயர்ஸ் கல்வி நிறுவனத்தில்ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், நாயர்ஸ் வித்யா மந்திர் பள்ளி முதல்வர் பிரியா, நாயர்ஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆகியோர் வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தனர். நாயர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மதன்குமார் தலைமை வகித்தார்.
விழாவில், பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் திலகம் ராஜேஷ் பேசுகையில், 'கல்வி என்பது வெறும் மதிப்பெண்களாக இருக்கக் கூடாது. அது வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு என்ற ஞானத்தை கற்றுக் கொடுப்பதாக இருக்க வேண்டும். பிரச்னை என்றால், அதை எதிர்கொண்டு சமாளிப்பது எப்படி என நமக்கு கற்றுத் தர வேண்டும்.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவர்கள் தங்களுடைய சொந்தக்காலில் நிற்கும் வகையில், அவர்களுடைய கல்வி அமைய வேண்டும். அதற்கு பெற்றோர், ஆசிரியர் ஒத்துழைப்பு அளிப்பது அவசியம்'' என்றார்.
பள்ளி குழந்தைகளின், நடனம், நாடகம், பாடல், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

