/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் குழாய் உடைந்து வீணாகி வருகிறது குடிநீர்; மக்கள் பாதிப்பு
/
ரோட்டில் குழாய் உடைந்து வீணாகி வருகிறது குடிநீர்; மக்கள் பாதிப்பு
ரோட்டில் குழாய் உடைந்து வீணாகி வருகிறது குடிநீர்; மக்கள் பாதிப்பு
ரோட்டில் குழாய் உடைந்து வீணாகி வருகிறது குடிநீர்; மக்கள் பாதிப்பு
ADDED : பிப் 19, 2024 12:00 AM

புதர் நிறைந்த கால்வாய்
கிணத்துக்கடவு, மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் உள்ள கழிவு நீர் கால்வாய் அருகே புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவு நீர் வெளியேறும் போது ஆங்காங்கே அடைந்து நிற்கிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. எனவே இந்த கால்வாய் அருகே உள்ள புதர்களை அகற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கவின், கிணத்துக்கடவு.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, சீனிவாசா வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.குடியிருப்புகளின் முன்பு கூட்டமாக சுற்றுவதால் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். குப்பைக்கழிவுகளையும் இழுத்துவந்து பரப்பிவிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- நவநீதன், உடுமலை.
ஆக்கிரமிப்பை அகற்றணும்
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் பாலத்தின் கீழ் பகுதியில், ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இங்கு விபத்து நடக்கவும் அதிக வாய்ப்புள்ளதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டெடுக்க வேண்டும்.
- - சத்தியா, பொள்ளாச்சி.
மஞ்சி துகளால் தொல்லை
பொள்ளாச்சி, பெத்தநாயக்கனூர் மேட்டுக்காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் மட்டை மில்லிலிருந்து வரும் மட்டை துகள்கள் காற்றுக்கு, ரோட்டில் படர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. எனவே இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பாபு, பொள்ளாச்சி.
ரோடு விரிவாக்கப்படுமா
கிணத்துக்கடவு - கோதவாடி செல்லும் வழியில் உள்ள ரோடு குறுகலாக இருப்பதால், வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. ரோட்டில் செல்லும் வாகனங்களை முந்திச்செல்லவும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் அகலப்படுத்த வேண்டும்.
-- கார்த்தி, கோதவாடி.
ரோட்டோரம் குப்பை
கிணத்துக்கடவு, செக்போஸ்ட்டில் இருந்து மின்துறை அலுவலகம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மற்றும் இப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த இடத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - சசி, கிணத்துக்கடவு.
வீணாகும் குடிநீர்
உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே ரோட்டில் குடிநீர் பைப் லைன் உடைந்துள்ளது. இதனால், பல லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது. ரோட்டையும் பாதிக்கிறது. வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். இதை குடிநீர் வடிகால் வாரியத்தினர் சரிசெய்ய வேண்டும்.
- செல்வராஜ், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, பார்க் ரோடு அரசு பள்ளி அருகே குப்பைக்கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், அப்பகுதியில் மிகுதியான புகை பரவுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், பள்ளி குழந்தைகளும் புகையால் அவதிப்படுகின்றனர்.
- ஜெயசந்திரன், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பெரியகடை வீதியில் வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மாலை நேரங்களில் அவ்வழியாக பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சித்ரா, உடுமலை.
புதர்களை அகற்றணும்
உடுமலை நகராட்சி ராஜலட்சுமி நகரில் மழைநீர் கால்வாயையொட்டி, செடிகள் வளர்ந்து புதர்மண்டிக்காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அந்த செடிகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, பழனியாண்டவர் நகர் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். ரோட்டில் மேடுபள்ளமாக இருப்பதால், இருள் சூழ்ந்திருக்கும் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- சுகுமார், உடுமலை.
ரோட்டில் குவியும் குப்பை
உடுமலை, ராஜேந்திரா ரோடு பிரதான ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் பழைய கிணறு இருந்தது. அதில் குப்பை, மூட்டைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, இதைனை நகராட்சி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சசிகுமார், உடுமலை.

