/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
57வது வார்டில் வீணாகுது குடிநீர்
/
57வது வார்டில் வீணாகுது குடிநீர்
ADDED : ஏப் 18, 2025 06:43 AM

கோவை; கோவை மாநகராட்சி, 57வது வார்டு, ஒண்டிப்புதுார் பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழாய் பதிக்கவும், 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காகவும் ரோடு தோண்டப்பட்டு இருக்கிறது. அதனால், அப்பகுதி ரோடு படுமோசமாக காணப்படுகிறது.
இதில், கிருஷ்ணம்மா நாயுடு வீதியில் குழி தோண்டியபோது, குழாயை உடைத்து விட்டனர்; இன்னும் சரி செய்யாததால், குடிநீர் கசிந்து குழி முழுவதும் தேங்கியுள்ளது. தொடர்ந்து குடிநீர் வருவதால் ரோட்டில் வழிந்தோடி, அருகாமையில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுகிறது. குழியில் தண்ணீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது; மாலை நேரங்களில் கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது.
பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் வீதிகளில் விளையாடுகின்றனர். குழிக்குள் விழக் கூடிய ஆபத்து இருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், குழாய் கசிவை சரி செய்து, குழியை மூடுவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

