/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது'
/
'பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது'
ADDED : ஜூன் 03, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், வன எல்லைப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான லிங்காபுரம், காந்தவயல், சிறுமுகை, பெத்திக்குட்டை, இலுப்பநத்தம், வச்சினம்பாளையம், பாலப்பட்டி, இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்தும், வன எல்லைப்பகுதிகளில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும் சிறுமுகை வனத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

