/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை வழித்தடமாக தோட்டத்தொழில் பகுதிகளை அறிவிக்க வேண்டாம் : தோட்ட தொழிலதிபர் சங்கத் தலைவர் அறிவுறுத்தல்

ADDED : அக் 07, 2024 12:50 AM
கோவை : கோவையில் தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின், 71வது ஆண்டு விழா நடந்தது. விழாவில், சங்கத்தின் தலைவர் வர்கீஸ் வைத்தியநாதன் பேசியதாவது:
மலைத்தோட்டங்களில் விளைபொருட்கள் விலை, இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. ரஷ்யா --- உக்ரைன் போர், செங்கடல் பகுதியில் சீரான கப்பல் போக்குவரத்தை பாதித்தது. கப்பல் சரக்கு கட்டண விகிதம், காப்பீடு கட்டணங்களை அதிகரித்துள்ளது.
தோட்ட விளைபொருட்களின் உற்பத்தி செலவில் தொழிலாளர் ஊதியம், நலவசதிகளின் செலவினம் 65 சதவீதமாக உள்ளது. தொழிலாளர், தொழிலதிபர் தரப்பு பேச்சால் மட்டுமே ஏற்படும் ஊதிய ஒப்பந்தங்கள் அடிப்படையில், நீண்ட கால தீர்வு கிடைக்கும். அடுத்த ஆண்டு மத்தியில், புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்படும்.
மலைத்தோட்டங்களில் குறிப்பிட்ட பயிர்கள் மட்டுமே, பயிரிட வேண்டும் என்ற சட்டத்தை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட சதவீதத்தில் வேறு பயிர்களையும் பயிரிட அனுமதிக்க வேண்டும். தோட்டப்பகுதி சுற்றுலா வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
தோட்டத்தொழிலால் வன உயிரினங்களுக்கு, எவ்வித ஆபத்தும் இல்லை. தோட்டத்தொழில் பகுதிகளில் யானை வழித்தடங்களை அறிவிப்பது தேவையற்றது.
தமிழ்நாட்டில் உள்ள தோட்டத்தொழிலை, மாநில அரசின் ஏதாவது ஒரு பொருத்தமான துறையில் கொண்டு வந்து ஒருங்கிணைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தோட்டத்தொழிலாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள், நிதியுதவியை, வீரராகவ ராவ் வழங்கினார்.
தோட்டத்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் வீர ராகவ ராவ், சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், தென்னிந்திய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் (உபாசி) தலைவர் மேத்யூ ஆப்ரகாம் பங்கேற்றனர்.