/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் வளர்ச்சி பணிகள்; முதல்வர் திறப்பு
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் வளர்ச்சி பணிகள்; முதல்வர் திறப்பு
வனபத்ரகாளியம்மன் கோவிலில் வளர்ச்சி பணிகள்; முதல்வர் திறப்பு
வனபத்ரகாளியம்மன் கோவிலில் வளர்ச்சி பணிகள்; முதல்வர் திறப்பு
ADDED : நவ 14, 2024 05:09 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஒரு கோடியே, 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய கட்டடங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக் கோவில் வளாகத்தில் சுற்று பிரகார மண்டபம், நடைபாதை மண்டபம், முடி காணிக்கை மண்டபம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதல் கட்டமாக, 62 லட்சம் ரூபாய் செலவில் பவானி ஆற்றில் படித்துறையும், 42 லட்சம் ரூபாய் செலவில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளும், 22 லட்சம் ரூபாய் செலவில் சேவார்திகள் தங்கும் விடுதியும், 53 லட்சம் ரூபாயில் மூன்று இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என, மொத்தமாக, ஒரு கோடியே, 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல செயற்பொறியாளர் ரேவதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவி, ஹிந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் தாலூகா ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் ஹேமலதா நன்றி கூறினார்.

