/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருத்தி விவசாயத்தில் விருத்தி: களப்பயிற்சி முகாமில் விளக்கம்
/
பருத்தி விவசாயத்தில் விருத்தி: களப்பயிற்சி முகாமில் விளக்கம்
பருத்தி விவசாயத்தில் விருத்தி: களப்பயிற்சி முகாமில் விளக்கம்
பருத்தி விவசாயத்தில் விருத்தி: களப்பயிற்சி முகாமில் விளக்கம்
ADDED : டிச 10, 2024 11:41 PM

பெ.நா.பாளையம்: வெற்றிகரமாக பருத்தி விளைவிப்பது குறித்த களப்பயிற்சி முகாம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்தது. திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன் பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மற்றும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், பருத்தி உழவர் பெருவிழா நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் அறிவியல் நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி குமார வடிவேலு, பருத்தி செடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
சிறப்பு அழைப்பாளர் ராமசாமி பேசுகையில், ''அடர் நடவு முறை ஒரு புதிய தொழில் நுட்பம். இம்முறையில் 90க்கு 15 செ.மீ., என்ற இடைவெளியில் விதைத்தால், ஒரு ஏக்கருக்கு, 29 ஆயிரம் செடிகளை பராமரித்து, அதிகப்படியான விளைச்சலை காணலாம். பருத்தி சாகுபடி பரவலாக குறைந்து வரும் நிலையில், அடர் நடவு முறையில் இயந்திர விளைச்சலுக்கு ஏற்றவாறு விதைத்து அதிகப்படியான உற்பத்தியை அடையலாம்,'' என்றார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி பேசுகையில், ''பருத்தி விவசாயம் குறைந்து வரும் நிலையில், அடர் நடவு முறையில் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக பராமரித்தால், பருத்தியில் நல்ல லாபம் ஈட்டலாம்,'' என்றார்.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் பங்கேற்ற முதன்மை விஞ்ஞானிகள் சங்கரநாராயணன், இஸபெல்லா அகர்வால், உஷாராணி, வளர்மதி, சங்கர் கணேஷ் ஆகியோர் பருத்தி சாகுபடியில் சவால்களை எதிர்கொள்வது குறித்தும், பருத்தியை தாக்கக்கூடிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விளக்கினர்.
வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் சுரேஷ்குமார் மற்றும் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பருத்தி கள ஆய்வில் அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

