/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குஷ்புவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
/
குஷ்புவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழக அரசு வழங்கும் பெண்கள் உரிமைத்தொகையை, பா.ஜ., நிர்வாகி குஷ்பு கொச்சைப்படுத்தி பேசியதாக, டாடாபாத் அருகே தி.மு.க., மாநகர் மாவட்ட மகளிரணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் தலைமையில், குஷ்பு புகைப்படத்தை செருப்பால் அடித்தும், புகைப்படத்தை கிழித்து தீ வைத்து எரித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மாலதி, மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா உட்பட பலர் பங்கேற்றனர்.

