சூலுார், ஜூலை 29-
வேலந்தாவளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 33. விவசாயி. தனது காரில், நண்பர் சரவணக் குமாருடன், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் சென்றார். அங்கு நடந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பின், நேற்று முன்தினம் வேலந்தாவளம் புறப்பட்டார்.
நள்ளிரவு எல் அண்ட் டி பை - பாஸ் ரோட்டில் வெள்ளலூர் பிரிவு அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளார்.
அப்போது, எதிரில் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சென்ற அரசு பஸ் மீது கார் மோதியது. இதில், காரை ஓட்டி சென்ற பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணக்குமார், பஸ் டிரைவர் ரகுநாத் ஆகியோர் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் - கார் மோதல் ; ஒருவர் பலி கேரள மாநிலம், வேலந்தாவளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 33. விவசாயி. தனது காரில், நண்பர் சரவணக் குமாருடன், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் சென்றார். அங்கு நடந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பின், நேற்று முன்தினம் வேலந்தாவளம் புறப்பட்டார்.
நள்ளிரவு எல் அண்ட் டி பை - பாஸ் ரோட்டில் வெள்ளலூர் பிரிவு அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளார்.
அப்போது, எதிரில் கேரளாவில் இருந்து பெங்களுரூக்கு சென்ற அரசு பஸ் மீது கார் மோதியது.
இதில், காரை ஓட்டி சென்ற பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணக்குமார், பஸ் டிரைவர் ரகுநாத் ஆகியோர் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தால் பை - பாஸ் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

