/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.21.79 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
/
ரூ.21.79 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
ADDED : டிச 20, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 21.79 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் ஏலம் முறையில் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில், 13.35 மெட்ரிக் டன் கொப்பரை, 21.79 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதில், முதல் தர கொப்பரை, 172.10 முதல் 178.80 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை, 112.71 முதல் 168.20 ரூபாய்க்கும் விற்பனையானது. இதில், 27 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் பயனடைந்தார்கள். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.

