/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் எஸ்க்லேட்டர் அமைக்கும் பணி மும்முரம்
/
ரயில்வே ஸ்டேஷனில் எஸ்க்லேட்டர் அமைக்கும் பணி மும்முரம்
ரயில்வே ஸ்டேஷனில் எஸ்க்லேட்டர் அமைக்கும் பணி மும்முரம்
ரயில்வே ஸ்டேஷனில் எஸ்க்லேட்டர் அமைக்கும் பணி மும்முரம்
ADDED : நவ 20, 2024 12:44 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் வசதிக்காக, எஸ்க்லேட்டர், லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் ரயில் பாதையை கடந்து செல்லாமல் இருக்க, டிக்கெட் வழங்கும் இடத்தில் துவங்கி, பிளாட்பாரம் மற்றும் ரயில்வே குடியிருப்புகளுக்கு செல்லும் வகையில், 67 படிக்கட்டுகள் கொண்ட நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக, ரயில்வே ஸ்டேஷனில் வசதிகள் செய்ய, மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக சிமெண்ட் சாலைகள், பூங்காக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், பிளாட்பாரத்தில் பயணிகள் நிழல் கூடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பயணிகள் எளிதில் பிளாட்பாரத்திற்கு செல்ல, டிக்கெட் வழங்கும் இடத்திலும், பிளாட்பாரத்திலும் இரண்டு எஸ்க்லேட்டர்களும், இரண்டு லிப்ட்டுகளும் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.

