/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அரசியலமைப்பு சட்ட தின விழா
/
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அரசியலமைப்பு சட்ட தின விழா
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அரசியலமைப்பு சட்ட தின விழா
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அரசியலமைப்பு சட்ட தின விழா
ADDED : நவ 29, 2024 06:58 AM
சூலுார்; தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், அரசியலமைப்பு சட்ட தின விழா பட்டணத்தில் நடந்தது.
சூலுார் ஒன்றிய தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 75 வது இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழா கொண்டாடப்பட்டது.
பட்டணத்தில் நடந்த கூட்டத்துக்கு தங்கவேல் தலைமை வகித்தார்.
மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் அரசியலமைப்பு சட்டம் குறித்தும், டாக்டர் அம்பேத்கார் குறித்தும் விளக்கி பேசினார்.
வக்கீல் ரவீந்திரன், கிருஷ்ணம்மாச்சாரி ஆகியோர் பேசினர். முன்னதாக அம்பேத்கார் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.