/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டிகளில் பதக்கங்கள் குவித்த 150 வீரர், வீராங்கனைக்கு பாராட்டு
/
போட்டிகளில் பதக்கங்கள் குவித்த 150 வீரர், வீராங்கனைக்கு பாராட்டு
போட்டிகளில் பதக்கங்கள் குவித்த 150 வீரர், வீராங்கனைக்கு பாராட்டு
போட்டிகளில் பதக்கங்கள் குவித்த 150 வீரர், வீராங்கனைக்கு பாராட்டு
ADDED : மார் 27, 2025 11:59 PM
கோவை: பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.
இதில், 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பல்கலை, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், 150 பேர் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு மின்வாரிய மூத்த விளையாட்டு அதிகாரி கணேசன் பரிசுகள் வழங்கி பேசுகையில்,''விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற தொடர் முயற்சி மிக அவசியம். அதேசமயம், கடும் உடற்பயிற்சி நமது இலக்கு நோக்கி பயணிக்க உறுதுணையாக இருக்கும். மணல் மூட்டைகளை சுமர்ந்துகொண்டு வீரர்கள் பயிற்சி செய்த காலமெல்லாம் உண்டு. பிரகாசமான வாழ்க்கைக்கு விளையாட்டு வழிவகுக்கும்,'' என்றார்.
கல்லுாரி செயலாளர் கண்ணைய்யன், முதல்வர் செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.