/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெரிசலில் சிக்கி தவிக்கும் நெடுஞ்சாலை தாறுமாறான 'பார்க்கிங்'கால் கவலை
/
நெரிசலில் சிக்கி தவிக்கும் நெடுஞ்சாலை தாறுமாறான 'பார்க்கிங்'கால் கவலை
நெரிசலில் சிக்கி தவிக்கும் நெடுஞ்சாலை தாறுமாறான 'பார்க்கிங்'கால் கவலை
நெரிசலில் சிக்கி தவிக்கும் நெடுஞ்சாலை தாறுமாறான 'பார்க்கிங்'கால் கவலை
ADDED : மார் 13, 2024 10:50 PM
உடுமலை- போக்குவரத்து மிகுந்த, நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நகரில் நெரிசல் அதிகரித்துள்ளது; பிரச்னைக்கு போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
உடுமலை பஸ் ஸ்டாண்ட், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, தேசிய நெடுஞ்சாலை மிக குறுகலாக உள்ளது. இருபுறங்களிலும், கடைகளும் அதிகளவு அமைந்துள்ளன.
நகருக்கு பை - பாஸ் ரோடு வசதியில்லாததால், பிற பகுதிகளில் இருந்து வரும் கனகர வாகனங்களும், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாகவே பொள்ளாச்சி செல்ல வேண்டும்.
இவ்வாறு, அதிக போக்குவரத்து உள்ள ரோட்டில், பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, இருபுறங்களிலும், தாறுமாறாக வாகனங்களை 'பார்க்கிங்' செய்கின்றனர். குறிப்பாக, கார்கள், ரோட்டை ஒட்டி நிறுத்தப்படுகின்றன.
இதனால், பிற வாகனங்கள், விலகிச்செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது, பஸ் ஸ்டாண்ட் வரை, அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கடந்தாண்டு, தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது; அப்போது, தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரோட்டோரத்தில், நடைபாதையும் அமைக்கப்பட்டது.
ரோட்டை ஒட்டி, வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நடைபாதை இருக்கும் இடமே தெரியாத நிலை காணப்படுகிறது. இதனால், பாதசாரிகளும், ரோட்டிலேயே நடந்து செல்லும் போது, விபத்துகளும் ஏற்படுகிறது.
நகரின் பிரதான ரோட்டில், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் ஏற்பட்டாலும், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. உடனடியாக 'பார்க்கிங்' விதிமுறைகளை வரையறுத்து, விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

