ADDED : பிப் 27, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணித மன்ற நிறைவு விழா நடந்தது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீகானப்பிரியா தலைமை வகித்தார். கணிதத் துறை தலைவர் பபிதா வரவேற்றார். ராமகிருஷ்ண கலை அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் சந்தோஷ் குமார், உயர் கல்வி படித்தல், வேலை வாய்ப்பு பெறுதல் குறித்து பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதத்துறை மாணவன் அருண் நன்றி கூறினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர்.

